காபி & தேயிலை

ஏப்ரல் மாதத்தில் காபி ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு

காபி ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து ரூ.536 கோடியாக உயர்ந்துள்ளது என காபி வாரியம் தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.481 கோடியாக இருந்தது.

பிரேசில்

சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. பிரேசிலின் காபி உற்பத்தி குறைந்திருக்கும் என்ற மதிப்பீட்டின் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் சர்வதேச சந்தையில் காபி விலை உயர்ந்து வந்தது. இதன் காரணமாக இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் பலனாக, மதிப்பு அடிப்படையில் காபி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேசமயம் அளவு அடிப்படையில் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.

சென்ற மாதத்தில் காபி ஏற்றுமதி அளவு அடிப்படையில் 4 சதவீதம் குறைந்து 31,836 டன்னாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 33,211 டன்னாக இருந்தது.

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ஜோர்டான், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யகின்றன.

நடப்பு 2013-14 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) காபி உற்பத்தி 2.1 சதவீதம் குறைந்து 3.12 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது சென்ற பருவத்தில் (2012-13) 3.18 லட்சம் டன்னாக இருந்தது.

மத்திய அமெரிக்கா

மத்திய அமெரிக்கா பகுதிகளில் தேயிலையில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது மற்றும் பிரேசிலில் வறட்சி நிலவியது போன்ற காரணங்களால் நடப்பு ஆண்டில் இதுவரை சர்வதேச சந்தையில் காபி விலை 80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே இனிவரும் மாதங்களிலும் காபி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேயிலை வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply