ஏற்றுமதி சந்தை

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்

ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பாரம்பரிய சந்தைகளை மட்டும் நம்பி இருக்காமல் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வர்த்தக துறை செயலாளர் ராஜூவ் கேர் தெரிவித்தார்.

இந்தியாவின் பராம்பரிய ஏற்றுமதி சந்தைகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விளங்குகின்றன. பொதுவாக நம்நாட்டின் ஏற்றுமதியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நாடுகள் பொருளாதார மந்தநிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பிறகு அந்நாடுகளில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் தொடர்ந்து ஏழு மாதங்களாக ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டது இருப்பினும், பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்தது.

தற்போது சீனா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இந்திய பொருள்களுக்கான தேவைப்பாடு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய சரக்குகள் ஏற்றுமதிக்கு வளமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாசம் வர்த்தக உபரியாகும். நம் நாட்டில் சேவைகள் ஏற்றுமதியை பொறுத்தவரை வர்த்தக உபரி நிலவுகிறது. அதாவது இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக உள்ளது. அதே சமயம் சரக்குகள் ஏற்றுமதியில் வர்த்தக பற்றாக்குறை காணப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply