வங்கிக் கடன் & மான்யம்

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வங்கி கடன் வசதி

வங்கிகள் கடன் வழங்கும் முன்னுரிமை துறைகளின் பட்டியலில், ஏற்றுமதி துறையை சேர்க்க முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ரூபாய் மதிப்பு: அவர், மும்பையில் ஏற்றுமதியாளர்களின் கருத்தரங்கில் பேசியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, ஒரு நிலைக்கு வர வேண்டும். ரூபாயின் சரியான மதிப்பு, 59–60 ஆக இருக்கும் என, கருதுகிறோம்.வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு கடன் வழங்குகின்றன. இந்த பட்டியலில், ஏற்றுமதியை சேர்த்து, முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க, ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

வங்கிகள் வழங்கும் மொத்த கடன்களில், 40 சதவீதத்தை முன்னுரிமை அடிபடையில் வேளாண்மை, சிறுதொழில்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்க வேண்டும்.இதில், ஏற்றுமதியையும் சேர்த்தால், அத்துறையில் உள்ள வேறு சில பிரிவுக ள் பாதிக்கப் படுமோ என்ற அச்சம் உள்ளது. இது குறித்து தான், ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எழுச்சி: தற்போது, நிலைமை மாறி வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் எழுச்சி காணத் துவங்கி உள்ளது. ஐரோப்பா விலும், ஒரு சில நாடுகளில் வளர்ச்சி விகிதம் நன்கு உள்ளது. மொத்தத்தில், அன்னிய பொருளாதாரம் மாறி வருகிறது. இது நமக்கு நல்ல வாய்ப்பாகும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Leave a Reply