ஏற்றுமதி செய்திகள்

ஏற்றுமதி வர்த்தகம் 5.71 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: வர்த்தகத்துறை செயலாளர் ராஜீவ் கெர் நேற்று கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுக்கு ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன்மூலம் வர்த்தக பற்றாக்குறை 992 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.2013&2014 நிதியாண்டில் ஏப்ரல் & ஜனவரி இடையேயான காலக்கட்டத்தில் மொத்த ஏற்றுமதியானது 5.71 சதவீதம் அதிகரித்து 25,709 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன்படி பார்க்கும்போது, நடப்பு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டுக்கான 32,500 கோடி அமெரிக்க டாலர் என்ற இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply