ஏற்றுமதி செய்திகள்

ஏற்றுமதி 6.3 சதவீதம் உயர்வு

நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:

2013-14ஆம் தொடக்கத்தில் மந்தமாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம் இறுதிக் கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 32,600 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20.19 லட்சம் கோடி) எட்டியது. அதன்படி ஏற்றுமதி வளர்ச்சி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருந்தபோதிலும், இறக்குமதி குறைந்துள்ளது. உள்ளூர் வர்த்தகம் அல்லது உற்பத்தி நன்றாக இருக்கும் என்று ஆரூடம் கூறமுடியாது. நமது நோக்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஆரோக்கியமான வர்த்தக வளர்ச்சியை, ஒரே காலத்தில் சம அளவில் எட்டுவதேயாகும்.

2011இல் 6.1 சதவீதமாக இருந்த உலக வர்த்தக வளர்ச்சி 2013இல் 2.7 சதவீதம் குறைந்தது. இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி துல்லியமாக மீண்டு வந்துள்ளதைக் காண முடிகிறது. ஆனால், உற்பத்தித் துறையில் பலவீனமான நிலை தொடர்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

2012-13ஆம் நிதியாண்டில் 3,040 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.60 லட்சம் கோடி) ஏற்றுமதி இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் குறைவாகும்.

Leave a Reply