காபி & தேயிலை

ஐரோப்பிய சந்தையில் காஃபி தேவை குறைந்துள்ளதால் ஏற்றுமதி 5.3% சரிவு

2012 அக்டோபர் முதல் 2013 செப்டம்பர் வரையான காலத்தில் நாட்டின் காஃபி ஏற்றுமதி 5.3% ஆக சரிந்துள்ளதாகவும், ஐரோப்பிய சந்தையில் திடிரென காஃபி தேவை குறைந்துள்ளதே இதற்கு காரணம் எனவும் காஃபி வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு காஃபி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

2011 அக்டோபர் முதல் 2012 செப்டம்பர் வரையான காலத்தில் 3,16,164 டன் அளவுக்கு காஃபி ஏற்றுமதி அதிகரித்து இருந்தது. இந்நிலையில் விலை அதிகம் என்பதால் தற்போது இத்தாலியில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்திய காஃபு பொடியை தவிர்த்து வருவதாகவும், அதனைவிட விலை குறைவான காஃபி பொடியை அவர்கள் விரும்புவதாகவும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இத்துடன் ஐரோப்பிய சந்தையில் நிலவும் பொருளாதார சரிவும் காஃபி ஏற்றுமதியை பாதித்துள்ளது.

2012 அக்டோபர் முதல் 2013 செப்டம்பர் வரையான காலத்தில் காஃபி ஏற்றுமதி 5.3% சரிவுடன் 2,99,266 டன்னாக உள்ளது என்று காஃபி வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் இது 1.3% சரிவு என்றும் இதனால் ரூ.3,530 கோடி வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காஃபி வாரியம் தெரிவித்துள்ளது. வரும் 2013 – 2014 ஆம் பருவ ஆண்டில், உள்நாட்டில் காஃபி கொட்டைகள் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதற்கேற்ப காஃபி ஏற்றுமதி சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காஃபி வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply