இறக்குமதி செய்திகள்

ஒதுக்கீடுகள் ரத்து- நிலக்கரி இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்

நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், இந்திய நிறுவனங்களின் நிலக்கரி இறக்குமதி செலவினம் ரூ.18,000 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளது என மேக்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று கூறியிருந்த உச்ச நீதிமன்றம், கடந்த புதன்கிழமையன்று 218 சுரங்கங்களில் 214 சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதில், 40 சுரங்கங்கள் நிலக்கரி உற்பத்தி செய்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி செலவினம் 300 கோடி டாலர் அதிகரிக்கும் என்றும், ஜிந்தால் ஸ்டீல் மற்றும் ண்டால்கோ ஆகிய நிறுவனங்களுக்கு அதிக சுமை ஏற்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் நிலக்கரி இறக்குமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது. நிலக்கரி வளத்தைப் பொறுத்தவரை நம் நாடு 4-வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.95,000 கோடி செலவில் 16.84 கோடி டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்தது. நடப்பு நிதி ஆண்டில் செலவினம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply