இறக்குமதி செய்திகள்

கடந்த நிதி ஆண்டில் 3.24 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி

கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி 49 சதவீதம் அதிகரித்து 3.24 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டில் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரப்பர் உற்பத்தி 7.6 சதவீதம் குறைந்து 8.44 லட்சம் டன்னாக சரிவடைந்தது. அதேசமயம், இதே காலத்தில் ரப்பர் பயன்பாடு 9.73 லட்சம் டன்னிலிருந்து 9.77 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. தேவையை காட்டிலும் உற்பத்தி குறைவாக இருந்ததால் ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது

Leave a Reply