இறக்குமதி செய்திகள்

கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினம், ஆபரணங்கள் இறக்குமதி 9% குறைந்தது

தங்கம் இறக்குமதி மீதான கடுமையான கட்டுப்பாடுகளால் 2013-14-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதி ஒன்பது சதவீதம் குறைந்து ரூ.1.86 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் (2012-13) ரூ.2.04 லட்சம் கோடியாக இருந்தது. நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தங்க கட்டிகள்

சென்ற நிதி ஆண்டில் தங்க கட்டிகள் இறக்குமதி 47 சதவீதம் குறைந்து ரூ.32,540 கோடியாக குறைந்துள்ளது. இது, 2012-13-ஆம் நிதி ஆண்டில் ரூ.61,431 கோடியாக இருந்தது. தங்க ஆபரணங்கள் இறக்குமதி ரூ.25,037 கோடியிலிருந்து ரூ.3,497 கோடியாக குறைந்துள்ளது. வெள்ளி கட்டிகள் இறக்குமதி ரூ.378 கோடியிலிருந்து ரூ.222 கோடியாக குறைந்துள்ளது.

அதேசமயம், கச்சா மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. கச்சா வைரங்கள் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்து ரூ.39,586 கோடியாக உயர்ந்துள்ளது.

தங்க கட்டிகள் மற்றும் ஆபரணங்கள், வைரங்கள், வண்ண கற்கள், முத்துக்கள், பிளாட்டினம், செயற்கை வைரம் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

Leave a Reply