வேளாண் பொருட்கள்

கடந்த 2013 -14 -ஆம் நிதி ஆண்டில் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி 4,500 கோடி டாலராக உயர்வு

கடந்த 2013 -14 – ஆம் நிதி ஆண்டில் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி 4,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2011 – 12 -ஆம் நிதி ஆண்டில் 2,500 கோடி டாலர் அளவிற்கே வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியாகி இருந்தன.

விவசாயிகளின் ஒட்டுமொத்த முயற்சிகள், அரசின் கொள்கைகள் மற்றும் வர்த்தக பிரிவினரின் ஆர்வம் போன்ற காரணங்களால் சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் மொத்த லாப வரம்பு உற்பத்தி செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. முக்கிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதாய விலையை மத்திய அரசு அதிகரித்து வந்ததே இதற்கு காரணம் என விவசாய செலவினம் மற்றும் விலை அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் இவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது.

Leave a Reply