இறக்குமதி செய்திகள்

கடந்த 6 மாதத்தில் சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ரூ.50 ஆயிரம் கோடி தங்கம் இறக்குமதி

சுவிஸ் நாட்டில் இருந்து கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவிற்கு ரூ.50 ஆயிரம்  கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து  பல்வேறு நாடுகளுக்கு இந்த ஆண்டில் இதுவரை ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான  தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிற்கு இந்த ஆண்டில் இதுவரை  ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது. இந்த தகவல் அந்நாட்டு  அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுவிஸ் நாட்டில் இருந்து ஸி26ஆயிரம் கோடி அளவிற்கு  தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில், இந்தியாவிற்கு மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய்  அளவிற்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த புள்ளி விவரத்தில்  சுட்டிகாட்டப்பட்டுள்ளது.  சுவிஸ் நாட்டு வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு  பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை கொடுக்கும்படி அந்நாட்டு அரசை  மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த  வரும்படி மத்திய அரசு அதிகாரிகளுக்கு சுவிஸ் அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.  இந்நிலையில், தங்கம் ஏற்றுமதி குறித்து அந்நாட்டு அரசு புள்ளி விவரத்தை தற்போது  வெளியிட்டு இருக்கிறது.

Leave a Reply