பொருள் வணிகம்

கடலை எண்ணெய் விலை சரிந்தது

விருதுநகர் மார்க்கெட்டில் பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ.500, பாமாயில் டின்னுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு மூட்டைக்கு ரூ.200, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 சரிந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தைக்கு பாசிப்பயறு வரத்து இல்லாத நிலையில், உள்ளூர் பாசிப்பயறு ஈரப்பத நிலையில் விற்பனைக்கு வருகிறது. பாசிப்பயறு (ஈரப்பதம்) ரூ.7,500, பாசிப்பயறு லயன் ரூ.8,000ல் இருந்து ரூ.8,500, அவியல் பாசிப்பயறு ரூ.8,700ல் இருந்து ரூ.9,500, பாசிப்பருப்பு லயன் ரூ.10,000ல் இருந்து ரூ.10,500, பாசிப்பருப்பு நாடு ரூ.9,300ல் இருந்து ரூ.9,800, உடைப்பு பாசிப்பருப்பு ரூ.7,800ல் இருந்து ரூ.8,200 என விற்பனையானது. கச்சா பாமாயில் விலை உயர்வால் பாமாயில் டின் (15 கிலோ) ரூ.850ல் இருந்து ரூ.860 ஆக உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு (80கிலோ) மூட்டை ரூ.4,500ல் இருந்து ரூ.4,300 ஆக குறைந்துள்ளது. இதனால் கடலை எண்ணெய் டின் ரூ.1,580ல் இருந்து ரூ.1,550 ஆக குறைந்துள்ளது.

 

Leave a Reply