தொழில்நுட்ப செய்திகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இந்தியா 11 வது இடம்

வளர்ந்து வரும் நாடுகளில் குடும்பங்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டைப் பொறுத்தவரை இந்தியா பதினோராவது இடத்தை பிடித்துள்ளது.

சிறப்பு திட்டங்கள்

சென்ற ஆண்டில் சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை சரிவடைந்திருந்தது. அதே சமயம் நம்நாட்டில் விற்பனை 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களே காரணமாகும். அவ்வாண்டில் மொத்தம் 1.15 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 67 லட்சம் கம்ப்யூட்டர்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2012 காலண்டர் ஆண்டுடன் ஒப்பிடும் போது 16 சதவீதம் அதிகமாகும்.

விற்பனை வளர்ச்சி கண்டுள்ளபோதிலும், குடும்பங்களின் கம்ப்யூட்டர் பயன்பாடு இதர வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத குடும்பங்கள் மட்டுமே கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றன. இது சிறிய நாடான இலங்கையை விட குறைவாகும்.

சர்வதேச அளவில், மலேசியாவில் அதிகளவில் குடும்பங்கள் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்நாட்டில் 64 சதவீத குடும்பங்களில் கம்ப்யூட்டர்கள் உள்ளன. சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் தலா 57 சதவீதமாக உள்ளது. துருக்கியில் 49 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து பிரேசில் (45 சதவீதம்), சீனா (35 சதவீதம்), மெக்சிகோ (30 சதவீதம்), தென்னாப்பிரிக்கா (18 சதவீதம்), வியட்நாம் (16 சதவீதம்) மற்றும் இலங்கை (10 சதவீதம்) ஆகியவை உள்ளன.

Leave a Reply