மலர்கள்

காதலர் தினம்: ரூ.40 கோடிக்கு கொய் மலர் ஏற்றுமதி

புதுடில்லி: நாளை, காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா வில் இருந்து, 40 கோடி ரூபாய் மதிப்பில், கொய் மலர் ஏற்றுமதியாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெங்களூரு, புனேவில் இருந்து மட்டும், தலா, 60 லட்சம் கொய் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும் என, இந்திய தாவர வளர்ப்பு வல்லுனர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

இரு மடங்கு உயரும் : இந்தியாவில் இருந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, கிரீஸ், சுவீடன், நியூசிலாந்து நாடு களுக்கு கொய் மலர்கள் ஏற்று மதியாகின்றன. நடப்பாண்டு, ரஷ்யா, லெபனான் நாடுகளும், இந்திய கொய் மலர்களுக்கு, புதிய சந்தை வாய்ப்பை வழங்கியு
உள்ளன. கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், இந்தியாவின் மலர் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட, 23.3 சதவீதம் அதிகரித்து, 5.90 கோடி டாலராக காணப்பட்டது. இது, வரும், 2014 – 15ம் நிதியாண்டில், இரு மடங்கு உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரோஜாக்களின் ஏற்று மதியில், நியூசிலாந்தின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது. ஐரோப்பாவில், வரலாறு காணாத பனிப் பொழிவு காரணமாக, ரோஜா உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவின் நீண்ட தண்டுள்ள ரோஜாக்களின் ஏற்றுமதி, 20 – 25 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிகிறது. இருந்தபோதிலும், சர்வதேச மலர் சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. இந்த ஆண்டு, சீனாவில், ரோஜா சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது; இதனால், உலக நாடுகளின் கவனம், இந்தியா பக்கம் திரும்பி உள்ளது. இதையடுத்து, மலர் சாகுபடியில், தமிழகத்தில், முதல் இடத்தில் உள்ள, ஓசூரில், ரோஜா ஏற்றுமதி, களை கட்ட துவங்கியுள்ளது.

ஓசூரில் இருந்து ரோஜா இதுகுறித்து, ஓசூர் விவசாயிகள் கூறியதாவது: ஓசூரில், ஆறு மாதத்துக்கு முன், பலத்த சூறாவளி காற்று வீசியதால், ரோஜா சாகுபடி பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்தது. இருந்த போதிலும், சீனா, எத்தியோபியாவில், அதிகளவில், உற்பத்தி குறைந்துள்ளதால், ஓசூர் ரோஜா தேவை அதிகரித்துள்ளது. காதலர் தினத்திற்காக, ஓசூரில், முன்னணி ரோஜாக்கள், 10 – 40 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இம்மலர்கள் விளையும், ஓசூர் சுற்றியுள்ள கிராமங்களில், மின்வெட்டு தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Leave a Reply