காபி & தேயிலை

காபி ஏற்றுமதி 5 சதவீதம் சரிந்தது

நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) காபி ஏற்றுமதி 5 சதவீதம் சரிவடைந்து 2,35,796 டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தேவைப்பாடு குறைந்தது மற்றும் அதிக விலை போன்ற காரணங்களால் ஏற்றுமதி குறைந்துள்ளது.

ரோபஸ்டா

மொத்த ஏற்றுமதியில் பொதுவாக ரோபஸ்டா காபியின் பங்கு அதிகமாக இருப்பது வழக்கம். ஜனவரி – செப்டம்பர் மாத காலத்தில் ரோபஸ்டா ஏற்றுமதி 19 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்திய ரோபஸ்டா விலைக்கும், வியட்நாமின் ரோபஸ்டா விலைக்கும் விலை வித்தியாசம் அதிகமாக இருந்ததால் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்திய ரோபஸ்டா காபியின் தரம் நன்றாக இருப்பதால் சர்வதேச சந்தையைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்கிறது.

பிரேசில்

பிரேசில் நாட்டில் மழை நிலவரம் நன்றாக உள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச சந்தையில் காபி விலை குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் புதிய சப்ளை சீசன் தொடங்கும்போது இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் காபியை காட்டிலும் தேயிலையே அதிகம் நுகரப்படுகிறது. இதனால் உற்பத்தியாகும் காபியில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அராபிகா, ரோபஸ்டாவுடன் உடனடி காபி ரகங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Leave a Reply