பொருள் வணிகம்

குவிண்டால் பருத்தி ரூ.4,500க்கு ஏலம்

கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் 1,000 மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பெங்களூர், ஓசூர், திருப்பூர், கோவை, அவினாசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் ஏராளமான பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவற்றை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகளும் ஏல மையத்தில் குவிந்தனர். ஏலத்திற்கு 1,000 மூட்டை பருத்தி வந்தது. பிடி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,750 முதல் ரூ.4,460 வரை விற்பனையானது. இதன் மூலம் ஒரே நாளில் 1,000 மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்திற்கு விற்பனையானது என்று சங்க நிர்வாகிகள் கூறினர்

Leave a Reply