ஜவுளி & ஆயத்த ஆடைகள்

கூடுதலாக 500 கோடி டாலருக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய முடியும்-டெக்ஸ்புரோசில் கருத்து

ஜவுளி துறைக்கு கூடுதலாக 500 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யும் திறன் உள்ளது என டெக்ஸ்புரோசில் தெரிவித்துள்ளது. எனினும் மத்திய அரசு ஆதரவும், சலுகைகளும் வழங்க வேண்டும் என இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பங்குசர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு தற்போது 3.5 சதவீதமாக உள்ளது. அதே சமயம் சீனாவின் பங்கு 35 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் சீனா தனது ஜவுளி ஏற்றுமதியை குறைத்து வருவது இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாதகமாக அமைந்துள்ளது.கடந்த நிதி ஆண்டில் 4,000 கோடி டாலருக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்றுமதியாளர்களின் கட்டண சுமைகளை மத்திய அரசு குறைத்தால் ஏற்றுமதியை மேலும் 500 கோடி டாலர் அதிகரிக்க முடியும் என டெக்ஸ்புரோசில் தலைவர் மாணிக்கம் ராமசாமி தெரிவித்தார். “போகஸ் புராடக்ட் திட்டத்திற்கு வழங்கி வரும் சலுகையை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். தற்போது 2 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி வருவாய் உயர்ந்துள்ளது. மேலும் தொலை தூர நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 7 சதவீத சலுகை வழங்கப்பட்டால் இந்த மூன்று அம்சங்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும்” என டெக்ஸ்புரோசில் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புஆயத்த ஆடைகள் பிரிவில் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை ஜவுளி துறை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு வழங்கி வரும் 3 சதவீத வட்டி மானிய சலுகையை ஜவுளி துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும் என ராமசாமி கூறினார்.இந்த நிலையில் ஜவுளி துறையின் வளர்ச்சிக்காக அதிக வேலைவாய்ப்பு புதிய கொள்கைகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று இத்துறைக்கான மத்திய அமைச்சர் எஸ்.கே. கங்குவார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply