சர்க்கரை

சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

இந்திய நிறுவனங்கள் கச்சா சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் குழு இதற்கு அனுமதித்துள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். அதன்படி, 40 லட்சம் டன் கச்சா சர்க்கரையை 2 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த ஏற்றுமதிக்கு ஊக்கத் தொகையும் தரப்படும். ஊக்கத் தொகையின் அளவு குறித்து அடுத்து நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தாமஸ் தெரிவித்தார்.

சர்க்கரை உற்பத்தி அதிகமாக உள்ளதாலும், அதற்கு உரிய விலை கிடைக்காததாலும் இந்திய சர்க்கரை ஆலைகள் பெரும் நிதிச் சிக்கலில் உள்ளன. இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஊக்கத்தொகையுடன் கூடிய சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply