காபி & தேயிலை

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி 8.4 சதவீதம் சரிவு

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 8.4 சதவீதம் குறைந்து 87 லட்சம் மூட்டைகளாக (1 மூட்டை 60 கிலோ) சரிவடைந்துள்ளது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு காரணம் என சர்வதே காபி அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் காபி ஏற்றுமதி 94 லட்சம் மூட்டைகளாக இருந்தது.

ஜனவரி மாத காபி ஏற்றுமதியில் அராபிகா ரக காபி ஏற்றுமதி 2.6 சதவீதம் குறைந்து 55 லட்சம் மூட்டைகளாகவும், ரோபஸ்டா ரக காபி ஏற்றுமதி 17.2 சதவீதம் சரிந்து 31 லட்சம் மூட்டைகளாகவும் குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதியில் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. வியட்நாமின் காபி ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்து 24 லட்சம் மூட்டைகளிலிருந்து 17 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது. இந்தோனேஷியாவின் காபி ஏற்றுமதி 43 சதவீதம் சரிந்து 6.41 லட்சம் மூட்டைகளிலிருந்து 3.60 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது.

காபி ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள பிரேசிலின் ஏற்றுமதி 5.5 சதவீதம் அதிகரித்து 25.50 லட்சம் மூட்டைகளிலிருந்து 27 லட்சம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரித்து 3.57 லட்சம் மூட்டைகளிலிருந்து 4.62 லட்சம் மூட்டைகளாக உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டில் சர்வதேச அளவில் காபி உற்பத்தி 9.8 சதவீதம் அதிகரித்து 14.52 கோடி மூட்டைகளாக இருந்தது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply