வணிகச் செய்திகள்

சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறை முதலீடு 45 லட்சம் கோடி டாலராகும்

சர்வதேச அளவில் 2020–ஆம் ஆண்டிற்குள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு 45 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பே இதற்கு பின்னணியாக இருக்கும் என தெரிகிறது. 2012–ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் உலக அளவில் முதலீடு 29 லட்சம் கோடி டாலராக இருந்தது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் வளரும் நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு 140 சதவீதம் அதிகரித்து 10.2 லட்சம் கோடி டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2012–ஆம் ஆண்டில் 4.3 லட்சம் கோடி டாலராக இருந்தது.

வளரும் நாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படும். மேலும் சில வளரும் நாடுகளில் சொத்துரிமை சட்டங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட உள்ளதால் வீடுகள், வர்த்தக ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளில் முதலீடு அதிகரிக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் காட்டிலும் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு பெரிய அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply