பொருள் வணிகம்

சின்ன வெங்காயம் விலை குறைகிறது

கடந்த சில மாதங்களாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விலை குறைந்தும், சிறிய வெங்காயம் விலை உச்சத்திலும் இருந்து வந்தது. இந்நிலை கடந்த 10 தினங்களாக படிப்படியாக தலைகீழாக மாறி வருகிறது. கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் உயர்ந்து கிலோ ரூ.40 ஆனது.கிலோ ரூ.45 மற்றும் ரூ.40 என கடந்த சில வாரங்களுக்கு முன் விற்பனையாகி வந்த சிறிய வெங்காயம் முதல் ரகம் கிலோ ரூ.25க்கும் 2ம் ரகம் கிலோ ரூ.20க்கும் விற்பனையாகிறது. சில இடங்களில் மொத்த விற்பனையில் சிறிய வெங்காயம் விலை ரூ.18 ஆக சரிந்துள்ளது. சிறிய வெங்காய கொள்முதல் விலை ரூ.10க்கு கீழ் சரிந்தது மற்றும் புனேயில் இருந்து பல்லாரி வெங்காயம் வரத்து நின்றது இதற்கு காரணம் என வியாபாரிகள் கூறினர். பெரிய வெங்காயம் விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Leave a Reply