இறக்குமதி செய்திகள்

சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு

கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், கோக்கிங் கோல் என்று அழைக்கப்படும் சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி, முந்தைய நிதியாண்டை விட, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில், ஒரு டன் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 111 – 118 டாலராக சரிவடைந்தது. இதை, சாதகமாகப் பயன்படுத்தி, இந்திய உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், சென்ற நிதியாண்டில், 3.31 கோடி டன் சிறப்பு வகை நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டுள்ளன.
இரும்பு தாதுமுந்தைய 2012 – 13ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில், இவ்வகை நிலக்கரியின் விலை (ஒரு டன்), 140 டாலராக இருந்தது.விலை குறைந்ததையடுத்து, இவ்வகை நிலக்கரியின் இறக்குமதி அதிகரித்துள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர் இரும்புத் தாதுவை உருக்குவதற்கு, இந்த சிறப்பு வகை நிலக்கரி அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், இவ்வகை நிலக்கரி யின் உற்பத்தி, தேவையில், 10 சதவீதம் அளவிற்கே உள்ளது. இதன் காரணமாகவே, உருக்குத் துறை நிறுவனங்கள், ஆண்டுக்கு, 3-3.20 கோடி டன் அளவிற்கு இவ்வகை நிலக்கரியை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி, 3 கோடி டன்னுக்கும் குறைவாக இருந்தது. கடந்த நிதியாண்டில், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 7.73 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 8.10 கோடி டன்னாக இருந்தது.தேவைஅதேசமயம், கடந்தாண்டில், நாட்டின் உருக்கு பொருட்களுக்கான தேவை, 0.6 சதவீதம் என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டிருந்தது.

நடப்பு நிதியாண்டில், சர்வதேச சந்தையில், ஒரு டன் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 100 டாலருக்கும் கீழ் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, உருக்கு நிறுவனங்கள், இதன் இறக்குமதியை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

Leave a Reply