வணிகச் செய்திகள்

சீனா உடனான பரஸ்பர வர்த்தகம் 50% அதிகரிக்கும்

இந்தியா-சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம் (ஏற்றுமதி + இறக்குமதி) 2015-ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதம் அதிகரித்து 10,000 கோடி டாலராக உயரும் என திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங்க அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சீனாவிற்கான இரும்பு ஏற்றுமதி குறைந்தது போன்ற காரணங்களால் சென்ற ஆண்டில் அந்நாட்டுடான பரஸ்பர வர்த்தகம் 6,650 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவுடனான வர்த்தகத்தில் சராசரியாக 3,500 கோடி டாலர் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவாலியா மேலும் தெரிவித்தார்.

ஐ.டி மற்றும் அது சார்ந்த சேவைகள், ஜவுளித் துறை, வீட்டு பர்னிச்சர்கள் மற்றும் மருந்து பொருள்களை அதிகளவில் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க முடியும். மேலும் சீன நிறுவனங்களும் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என அலுவாலியா மேலும் தெரிவித்தார்.

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதால் அதிகளவில் டாலர் வெளியேறுகிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதோடு ரூபாயின் வெளிமதிப்பும் சரிவடையும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply