வணிகச் செய்திகள்

சீனா, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி குறையும்

ஹாங்காங் : ‘அடுத்த இரு ஆண்­டு­களில், சீனா, ஜப்பான் ஆகிய நாடு­களின் பொரு­ளா­தாரம் மேலும் சரி­வ­டையும்’ என, ஐ.எம்.எப்., எனப்­படும் பன்­னாட்டு நிதியம் எச்­ச­ரித்­துள்­ளது.

அதன் அறிக்கை விவரம்: உலகின் இரண்­டா­வது மிகப்பெரிய பொரு­ளா­தார நாடாக சீனா விளங்­கு­கி­றது. எனினும், கால் நுாற்­றாண்டில் இல்­லாத அள­வாக, 2015ல், சீன பொரு­ளா­தாரம் மந்­த­ம­டைந்து, 6.9 சத­வீ­த­மாக குறைந்­தது. இது, இந்­தாண்டு, 6.5 சத­வீதம் என்ற அளவில் மேலும் சரி­வ­டையும். சீனாவின் பொரு­ளா­தார வளர்ச்சி என்­பது, அரசு முத­லீ­டுகள் மற்றும் ஏற்­று­ம­தியை சார்ந்தே உள்­ளது. இதை மாற்றும் முயற்­சியில், சீன தலை­வர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். சர்­வ­தேச மந்­த­நி­லையால், உள்­நாட்டு பயன்­பாட்­டிற்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிக்கத் துவங்­கி­யுள்­ளனர். இதன் தாக்­கத்தால் சுணக்­க­மாக உள்ள, சீனாவின் பொரு­ளா­தார வளர்ச்சி, 2017ல், 6.2 சத­வீ­த­மாக குறைய வாய்ப்­புள்­ளது.

அது­போல, ஜப்பான் பொரு­ளா­தா­ரமும் மந்­த­நி­லையில் உள்­ளது. ஒன்­றரை ஆண்­டு­களில் இல்­லாத வகையில், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான, ஜப்பான் கரன்­சி­யான, யென் மதிப்பு உயர்ந்­துள்­ளது. அத்­துடன், சீனா­வுக்­கான ஏற்­று­ம­தியும் குறைந்­துள்­ளது. இது­போன்ற கார­ணங்­களால், ஜப்பான் பொரு­ளா­தார வளர்ச்சி, 0.5 – 0.1 சத­வீதம் என்ற அள­விற்கு குறைய வாய்ப்­புள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
விறு விறு இந்தியா ஆசிய பிராந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், வளர்ச்சி வலுவாக இருக்கும். அவற்றில், இந்தியா தான் 7.5 சதவீதம் என்ற அளவில், மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக விளங்குகிறது. –பன்னாட்டு நிதியம்

Leave a Reply