இறக்குமதி செய்திகள்

சீன சைக்கிள்கள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் கவலை

சீனாவிலிருந்து சைக்கிள்கள் இலங்கை, வங்கதேசம் வழியாக நம் நாட்டுக்குள் இறக்குமதியாவதாக இந்திய சிறு தொழில்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் பதிஷ் ஜிண்டால், சீனாவிலிருந்து சைக்கிள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அதிக வரி உள்ளதால் அவை இலங்கை மற்றும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதாக குற்றம்சாட்டினார். சீனாவி்ல் இருந்து சைக்கிள் இறக்குமதி செய்ய 30 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும் நிலையில் இலங்கை, வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்ய 6.4 சதவிகிதமே வரி விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். சீன சைக்கிள்கள், அதன் உதிரிபாகங்கள் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அவை இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பதிஷ் ஜிண்டால் தெரிவித்தார். எனவே இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply