இறக்குமதி செய்திகள்

சீன பால் பொருட்கள் இறக்குமதிதடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

மத்திய அரசு, சீனாவிலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கான தடையை,மேலும் ஓராண்டிற்கு நீடித்துஉத்தரவிட்டுள்ளது.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்கான (பாலினால் ஆன சாக்லெட் வகைகள், கேண்டி, உணவு வகைகள்) தடை, வரும் 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

உரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும், “மெலமைன்” என்ற வேதிப்பொருள், இறக்குமதி செய்யப்படும் சீன பால் பொருட்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு, கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல், சீனா பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், பால் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது.

சென்ற 201314ம் நிதியாண்டில், நாட்டின் பால் உற்பத்தி, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14 கோடி டன்னாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 13.24 கோடி டன்னாக இருந்தது. உள்நாட்டில் பால் உற்பத்தியில், உத்தரபிரதேச மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத் ஆகியவை உள்ளன

Leave a Reply