தொழில்நுட்ப செய்திகள்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வை-பை வசதி

சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் “வை பை’ (கம்பி இல்லா இணைய இணைப்பு) வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டில் ஏ-1 மற்றும் ஏ வகை ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஏ-1 வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகியவற்றில் வை-பை வசதி விரைவில் வரவுள்ளது. ஏ வகை ரயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகியவற்றிலும் வை-பை வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இணைய தள வசதி உள்ள போன் இருந்தால் “வை-பை’ வசதி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். இப்புதிய வசதியால், ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ஏராளமான பயன்கள் பயணிகளுக்கு கிடைக்கும்.

Leave a Reply