இறக்குமதி செய்திகள்

சென்ற நிதி ஆண்டில் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி 17% குறைந்தது

சென்ற நிதி ஆண்டில் (2013-14) ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் குறைந்துள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டதால் ஆண்டின் இறுதிப் பகுதியில் எண்ணெய் இறக்குமதி ஓரளவு உயர்ந்த நிலையிலும் கூட ஒட்டுமொத்த அளவில் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஈரானிலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நாள் ஒன்றுக்கு 3.58 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி ஆகியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 43 சதவீதம் அதிகமாகும். எனினும் கடந்த நிதி ஆண்டில் ஈரானிய எண்ணெய் இறக்குமதி 17 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 2.22 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது.

அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் 2012-ல் பொருளாதார தடை விதித்தன. இதனால் ஈரானின் முக்கிய இறக்குமதியாளர்களான சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த நிதி ஆண்டில் ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைந்தபட்சம் 15 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்தது.

Leave a Reply