புண்ணாக்கு & தீவனங்கள்

சென்ற நிதி ஆண்டில் 43.31 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி

புண்ணாக்கு ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் (2013-14) 11 சதவீதம் சரிந்து 43.31 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் 48.46 லட்சம் டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையிலும் ஏற்றுமதி 3 சதவீதம் சரிந்து ரூ.11,800 கோடியிலிருந்து ரூ.11,450 கோடியாக குறைந்துள்ளது.

2013-14-ஆம் நிதி ஆண்டில் ஈரான் நம் நாட்டிலிருந்து அதிகளவு புண்ணாக்கை இறக்குமதி செய்துள்ளது. அந்நாட்டின் இறக்குமதி 8.87 லட்சம் டன்னிலிருந்து 12.43 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதில் சோயா புண்ணாக்கு 12.35 லட்சம் டன்னும், கடுகு புண்ணாக்கு 8,663 டன்னும் அடங்கும். அடுத்தபடியாக தென்கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி 9.07 லட்சம் டன்னிலிருந்து 11.65 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. தாய்லாந்து நாட்டிற்கான ஏற்றுமதி 4.50 லட்சம் டன்னிலிருந்து 3.13 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. வியட்நாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி 7 லட்சம் டன்னிலிருந்து 2.06 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதில் கடுகு புண்ணாக்கு 29,796 டன்னும், ஆமணக்கு புண்ணாக்கு 797 டன்னும், கடலை புண்ணாக்கு 1,344 டன்னும், சோயா புண்ணாக்கு 82,777 டன்னும், தவிட்டு எண்ணெய் புண்ணாக்கு 91,010 டன்னும் அடங்கும்.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் புண்ணாக்கு ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து 4.30 லட்சம் டன்னிலிருந்து 3.98 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.

Leave a Reply