இரும்பு தாது & உலோகம்

செயில் நிறுவனம் ஏற்றுமதியை 2 மடங்கு உயர்த்த திட்டம்

வரும் 2014-15-ஆம் நிதி ஆண்டில் செயில் நிறுவனம் ஏற்றுமதியை இரண்டு மடங்கு அதிகரித்து 10 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் உயர்ந்து 4.75 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, கனடா, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

நன்றி தினத்தந்தி

Leave a Reply