சேவைகள் ஏற்றுமதி

சேவைகள் ஏற்­று­மதி ரூ.81,780 கோடி

சென்ற ஏப்­ரலில், சேவைகள் ஏற்­று­மதி, 81,780 கோடி ரூபா­யாக (1,363 கோடி டாலர்) குறைந்­துள்­ளது.இது, முந்­தைய மார்ச்சில், 85,920 கோடி ரூபா­யாக (1,432 கோடி டாலர்) சற்று அதி­க­ரித்து காணப்­பட்­டது என, ரிசர்வ் வங்கி, தெரி­வித்­துள்­ளது.

கணக்­கீட்டு மாதத்தில், சேவை துறை இறக்­கு­மதி, 50,940 கோடி­யி­லி­ருந்து (849 கோடி டாலர்), 48,360 கோடி ரூபா­யாக (806 கோடி டாலர்) சரி­வ­டைந்­துள்­ளது.சென்ற முழு நிதி­யாண்டில், சேவைகள் ஏற்­று­மதி, 16,701 கோடி டால­ராக இருந்­தது. அதே­ச­மயம், இதன் இறக்­கு­மதி, 8,819 கோடி டாலர் என்ற அளவில் இருந்­தது.

மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், சேவைகள் துறையின் பங்­க­ளிப்பு, 60 சத­வீ­த­மாக உள்­ளது. இத்­து­றையின் ஏற்­று­மதி, இறக்­கு­மதி விவ­ரங்­களை, ரிசர்வ் வங்கி, 45 நாட்­க­ளுக்கு ஒரு முறை வெளி­யிட்டு வரு­கி­றது.

Leave a Reply