சேவைகள் ஏற்றுமதி 1,224 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1,231 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதியில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி 7.5 சதவீதம் உயர்ந்து 677 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்டு) சேவைகள் ஏற்றுமதி 6,611 கோடி டாலராகவும், இறக்குமதி 3,687 கோடி டாலராகவும் உள்ளது.வர்த்தக உபரிமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியில் பயண ஏற்பாடு, போக்குவரத்து, கட்டுமானம், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள், நிதிச் சேவைகள், அறிவுசார் சொத்துரிமை பயன்காட்டிற்கான கட்டணங்கள், தொலைத் தொடர்பு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.சரக்குகள் ஏற்றுமதியை பொறுத்தவரை நம் நாட்டில் வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது, ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதேசமயம், சேவைகளைப் பொறுத்தவரை இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் இப்பிரிவில் வர்த்தக உபரி காணப்படுகிறது. கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் 16,701 கோடி டாலர் அளவிற்கு சேவைகள் ஏற்றுமதியாகி இருந்தது. அந்த ஆண்டில் 8,819 கோடி டாலருக்கு சேவைகள் இறக்குமதி செய்யப்பட்டது.ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம்பாரத ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால புள்ளிவிவரம் ஒன்றில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வங்கி 2011 ஜூன் மாதத்திலிருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அம்மாதம் 15-ந் தேதி முதல் முறையாக ஏப்ரல் மாத சேவைகள் வர்த்தகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.
சேவைகள் ஏற்றுமதி 1,224 கோடி டாலர்
October 16, 20140204

தொடர்புடைய செய்திகள்
February 13, 20140212
இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி 15% வரை உயரும்!! நாஸ்காம்
மும்பை: வல்லரசு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு தேவை அதிகரிப்பால், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி அடுத்த ஆண்டு சற்று வேகமான வளர்ச்சியைக் எட்டும் என தகவல் தொழில்நுட்ப வர்த்தக அமைப்பான நாஸ்காம் தெரி
Read More June 24, 20140255
சேவைகள் ஏற்றுமதி ரூ.81,780 கோடி
சென்ற ஏப்ரலில், சேவைகள் ஏற்றுமதி, 81,780 கோடி ரூபாயாக (1,363 கோடி டாலர்) குறைந்துள்ளது.இது, முந்தைய மார்ச்சில், 85,920 கோடி ரூபாயாக (1,432 கோடி டாலர்) சற்று அதிகரித்து காணப்பட்டது என, ரிசர
Read More April 17, 20140219
கடந்த பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,316 கோடி டாலர்
கடந்த பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,316 கோடி டாலராக குறைந்து உள்ளது. இது, ஜனவரியில் 1,393 கோடி டாலராக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் சேவைகள் இறக்குமதி 727 கோடி டாலரிலிருந்து 639 கோடி டாலராக குறை
Read More
Leave a Reply