சேவைகள் ஏற்றுமதி

சேவைகள் ஏற்றுமதி 1,235 கோடி டாலராக சரிவு

நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 1,235  கோடி டாலராக (72,865 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 1,280 கோடி டாலராக (75,520 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஜூன் மாதத்தில், சேவைகள் இறக்குமதி, 698 கோடி டாலரிலிருந்து (41,182 கோடி ரூபாய்), 622 கோடி டாலராக (36,698 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), சேவைகள் துறையின் பங்களிப்பு, 55சதவீதம் என்ற அளவில் உள்ளது. நடப்பு, 2013 -14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த சேவைகள் ஏற்றுமதி, 3,799 கோடி டாலர் (2.24 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இதே காலாண்டில், சேவைகள் இறக்குமதி, 2,058 கோடி டாலராக (1.21 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி குறைவாக உள்ளதையடுத்து, சேவைகள் துறையில் வர்த்தக உபரி காணப்படுகிறது.

Leave a Reply