புண்ணாக்கு & தீவனங்கள்

சோயா புண்ணாக்கு ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்

வரும் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 4 லட்சம் டன் சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளுள், அதிகளவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சோயா உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், சோயா புண்ணாக்கை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு டன் சோயா புண்ணாக்கு, 440-480 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நிலவரப்படி, சோயா பயிரிடப்படும் பரப்பளவு, 1.22 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 1.06 கோடி ஹெக்டேராக இருந்தது.இதையடுத்து, 2013-14ம் ஆண்டில், நாட்டின் சோயா உற்பத்தி, 18சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.33 கோடி டன்னாக உயரும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply