முந்திரி கொட்டைகள் இறக்குமதி ஜனவரி மாதத்தில் 70 சதவீதம் குறைந்து 21,152 டன்னாக குறைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணமாகும். சென்ற ஆண்டின் இதே மாதத்தில் முந்திரி இறக்குமதி 70,493 டன்னாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) முந்திரி கொட்டை இறக்குமதி 14 சதவீதம் குறைந்து 6.91 லட்சம் டன்னாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2012–13) இறக்குமதி வரலாறு காணாத அளவிற்கு 9.19 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் முந்திரி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,500 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் 10 மாதங்களில் முந்திரி ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 1 லட்சம் டன் மற்றும் ரூ.4,206 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் முந்திரி ஏற்றுமதி அளவு அடிப்படையில் 1.10 லட்சம் டன்னாகவும், மதிப்பு அடிப்படையில் ரூ.4,420 கோடியாகவும் இருந்தது.
இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் டன் முந்திரி கொட்டைகள் பதப்படுத்தப்படுகின்றன. இதில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.
Leave a Reply