இறக்குமதி செய்திகள்

ஜனவரி மாதத்தில் ரப்பர் இறக்குமதி 20% குறைந்தது

ஜனவரி மாதத்தில் இயற்கை ரப்பர் இறக்குமதி 20 சதவீதம் குறைந்து 19,696 டன் என்ற அளவில் உள்ளது. அதே சமயம் நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) ரப்பர் இறக்குமதி 41 சதவீதம் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு 2.80 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த முழு நிதி ஆண்டில் (2012–13) இறக்குமதி 2.17 லட்சம் டன்னாக இருந்தது.

டிசம்பர் மாத இறுதியிலிருந்து ரப்பர் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து 82 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. அதே சமயம் உற்பத்தி 8 சதவீதம் சரிவடைந்து 93 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. ஜனவரி மாத இறுதி நிலவரப்படி ரப்பர் கையிருப்பு 2.72 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 8 சதவீதம் குறைவாகும்.

Leave a Reply