வர்த்தகக் கண்காட்சி & சந்தை

ஜப்பானில் சர்வதேச ஜவுளி கண்காட்சி

சர்வ தேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி ஜப்பானில் நடக்கவுள்ளது. இதில், திருப்பூர் பின்னலாடை துறையினர் பங்கேற்க ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஆயத்த ஆடை மேம்பாட்டு கழக முதுநிலை இயக்குநர் ரெட்டி வெளியிட்ட அறிக்கை: ஜப்பானில் சர்வதேச ஆயத்த ஆடை, ஜவுளி கண்காட்சி வரும் ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, இந்திய ஆயத்த ஆடை, ஜவுளி ஏற்றுமதியாளர்களை அழைத்து செல்லவும், அங்கு அரங்குகள் அமைக்கவும் ஆயத்த ஆடை மேம்பாட்டு கழகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜப்பானின் ஆயத்த ஆடை, ஜவுளி இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு என்பது கடந்த 3 ஆண்டுகளாக 0.9 சதவீத அளவில் மட்டுமே உள்ளது. ஜப்பானில் கடந்தாண்டு நடந்த சர்வதேச ஆயத்த ஆடை, ஜவுளி கண்காட்சியில் 23,000 வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றனர். கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

 

நன்றி தினகரன்

Leave a Reply