ஜவுளி & ஆயத்த ஆடைகள்தோல் பொருட்கள்

ஜவுளி, தோல் துறைகளுக்கும் ஏற்றுமதி சலுகை

தொழிலாளர் அதிகம் தேவையுள்ள தொழில் துறைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 2 சதவீத ஊக்க சலுகை பெறலாம் என வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்ககம் (டிஜிஎப்டி) தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி சலுகையை தற்போது ஜவுளி, தோல் தொழில் உள்ளிட்ட தொழிலாளர் தேவை அதிகமுள்ள துறைகளுக்கும் அரசு விரிவு படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்த ஆடை ஏறறுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) வரவேற்றுள்ளது.

Leave a Reply