வர்த்தகக் கண்காட்சி & சந்தை

‘ஜிடெக்ஸ் ஷாப்பர்’ துபாயில் இன்று துவக்கம்

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றான துபாய் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்“ இன்று துவங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே இது மிகப்பெரிய எலக்ட்ரனிக் பொருட்களின் கண்காட்சியாகும். துபாய் வேல்ட் ட்ரேட் சென்டரில் நடக்கும் இந்த கண்காட்சி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.ஆண்டுதோறும், நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் துவக்க நாள் முதலே மக்கள் கூட்டம் அலைமோதும். உள்ளூர் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை காண வருவார்கள். உலகின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த நவீன எலக்ட்ரானிக் தயாரிப்புகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். பார்வையாளர்களை கவரும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் பரிசுகளோடும் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

Leave a Reply