வணிக மேலாண்மை

ஜி.டீ.பி.யை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு மாறுகிறது

மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டீ.பி) கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி பற்றி உண்மையான நிலை தெரிய வரும் என மத்திய அரசு நம்புவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பணவீக்கத்தையே குறிக்கும்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருள்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் மொத்த மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது. இதுவே பொருளாதார வளர்ச்சியை காட்டும் அளவுகோலாக உள்ளது.

இதற்கான அடிப்படை ஆண்டாக இதுவரை 2004-05-ஆம் நிதி ஆண்டு இருந்து வந்தது. இதன்படி அந்த ஆண்டில் பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வாறு இருந்ததோ அதே மதிப்பு அடிப்படையில்தான் அவற்றின் இன்றைய விலை கணக்கிடப்படும். பழைய ஆண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுவதே உண்மை ஜி.டீ.பி. எனப்படுகிறது.

இன்றைய விலையில் பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை கணக்கிடுவது பணவீக்கத்தையே குறிக்கும் என்பதால் ஜி.டீ.பி. பற்றிய உண்மை நிலையை அது காட்டாது என்பது பொருளியல் மேதைகளின் முடிவாகும்.எனினும் ஜி.டீ.பி. மற்றும் பணவீக்கம் போன்ற மிக முக்கியமான பொருளாதார அளவுகோல்களுக்கு அடிப்படை ஆண்டை மாற்றாமல் நிரந்தரமாக வைப்பதும் தெளிவற்ற பிம்பங்களை தந்து விடும். எனவேதான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அடிப்படை ஆண்டும் மாற்றப்படுகிறது.

இந்த வகையில் ஜி.டீ.பி.க்கான அடிப்படை ஆண்டை 2011-12-ஆக நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி அந்த ஆண்டில் நிலவிய விலைகளின் அடிப்படையில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்படும்.புள்ளிவிவரங்கள் மாறும்அடிப்படை ஆண்டு மாறுவதால் 2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள் மாறுகின்றன.

2015 ஜனவரி மாதத்தில் அந்த மூன்று ஆண்டுகளுக்கான ஜி.டீ.பி. குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply