இறக்குமதி செய்திகள்

ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 10.22 சதவீதம் உயர்ந்து, 26.4 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே போல இறக்குமதியும் 8.33 சதவீதம் அதிகரித்து 38.24 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வர்த்தக பற்றாக்குறை 11.76 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், ஏற்றுமதி 24பில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதி 35.3 பில்லியன் டாலராகவும் இருந்தது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் ஏற்றுமதி 9.31% அதிகரித்து 80.11 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதி 6.92 சதவீதம் குறைந்து 113.19 பில்லியன் டாலராகவும் இருந்தது. வர்த்தக பற்றாக்குறை 33.08 பில்லியன் டாலராக இருக்கிறது. தங்கம் இறக்குமதி 65.13 சதவீதம் அதிகரித்து 3.12 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டு இது 1.88 பில்லியன் டாலர் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

 

Leave a Reply