இறக்குமதி செய்திகள்தங்கம் & ஆபரணங்கள்

தங்கம் இறக்குமதியில் கட்டுப்பாடு தொடரும்: ப.சிதம்பரம்

தங்கம் இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு மத்திய பட்ஜெட்டில் திட்டமிட்ட

அளவில் இருந்தாலும் கூட தங்கம் இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இது தொடர்பான அரசின் முடிவு சரியானது என நான் கருதுகிறேன். மேலும்

நம் நாட்டிலேயே சுரங்கங்களில் உள்ள தங்கத்தை எடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இனி தங்கம் எடுக்க முடியாது என்று இந்தியாவில் மூடப்பட்டுள்ள

சுரங்கங்களை அளித்தால் நாங்கள் தங்கம் எடுத்துக் காட்டுகிறோம் என நான் சந்தித்த சில வெளிநாட்டு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

டீசல் மானியத்தை படிப்படியாக குறைக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் லிட்டர் டீசலுக்கு 50 காசுகள் அதிகரிப்பது சரியான முடிவு. இதனை 3 ஆண்டுகளுக்கு முன்பே

தொடங்கியிருந்தால், இப்போது வர்த்தகப் பற்றாக்குறையே இல்லாமல் போயிருக்கும்.

வருமான வரி விகிதங்களை மத்திய அரசு மாற்றி அமைக்குமா என்று இப்போதே கூற முடியாது என்று அவர் கூறினார்.

Leave a Reply