இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

தங்கத்தின் இறக்குமதி கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்தாண்டு உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,820 கோடி டாலராக அதிகரித்தது. இதை கட்டுக்குள் கொண்டு வர தங்கம் இறக்குமதி மீதான சுங்கவரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கம் இறக்குமதி கணிசமாக குறைந்து நடப்பு கணக்கு பற்றாக்குறையும் சற்று குறைந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கம் இறக்குமதி மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. டிசம்பரில் 25 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, ஜனவரியில் 38 டன்னாக அதிகரித்துள்ளது. முன்னதாக நவம்பரில் இது 19 டன்னாக இருந்தது.

தங்கம் இறக்குமதி உயர காரணம் ரிசர்வ் வங்கியின் 80:20 திட்டம் தான் என்று கூறப்படுகிறது. அதாவது இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில், 20 சதவீதத்தை ஆபரணமாக மாற்றி அதை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற திட்டம் தான் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply