இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க பரிசீலனை

வர்த்தக பற்றாக்குறை அதிகரித்ததையடுத்து தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நடப்பு கணக்குகடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,800 கோடி டாலராக உயர்ந்தது. இதற்கு டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் நம் நாட்டில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில் மத்திய அரசு வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், பாரத ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 80:20 விதிமுறையையும் செயல்படுத்தியது. இதன்படி, தங்கம் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யும் மொத்த தங்கத்தில் 20 சதவீதத்தை கட்டாயம் மறு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் தங்கம் இறக்குமதி குறைந்தது. இதனையடுத்து, சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்தது.தங்கம் இறக்குமதி குறைந்ததால் நவரத்தினம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது. கடந்த மே மாதம் 21-ந் தேதி ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது. இதன்படி 80:20 விதிமுறை தளர்த்தப்பட்டது. இதனையடுத்து, அதிக நிறுவனங்கள் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அதற்குப் பிறகு வந்த மாதங்களில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவடைந்ததையும் நிறுவனங்கள் சாதகமாக்கி அதிக இறக்குமதி செய்தன. செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 450 சதவீதம் அதிகரித்துள்ளது.கோரிக்கைசெப்டம்பர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 1,400 கோடி டாலராக உயர்ந்தது. இதனால், நிதி அமைச்சகம் பாரத ரிசர்வ் வங்கியிடம் தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply