இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி சரிவு

கடந்த ஏப்ரலில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 67.3 சதவீதம் சரிந்து 19.6 டன்னாக இருக்கிறது. ஒரு சதவீத உற்பத்தி வரிக்கு எதிராக நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதால் ஏப்ரல் மாதத்தில் தேவை குறைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 60 டன் அள வுக்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்டிருந்தது. கடந்த ஜனவரி, பிப்ர வரி மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கமே பயன் படுத்தப்பட்டது.

கடந்த பட்ஜெட்டில் வெள்ளி அல்லாத நகைகளுக்கு ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்போவதாக ஜெட்லி அறிவித்தார். அதனால் மார்ச் 2-ம் தேதி முதல் நகைக்கடை நிறுவ னங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. 42 நாட்கள் நடந்த போராட்டம், மத் திய அரசின் உறுதிமொழி காரண மாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

2015-16-ம் நிதி ஆண்டில் 750 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டி ருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply