காய் கறிகள் & பழங்கள்

தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை

மும்பை : கடந்த, 26 ஆண்­டு­க­ளுக்குப் பின், இந்­தியா அனுப்­பிய, 1.3 டன் மாதுளம் பழம், அமெ­ரிக்­காவில், மே 1ம் தேதி இறக்­கு­ம­தி­யா­னது.

அமெ­ரிக்கா, 1990ல், இந்­திய மாம்­ப­ழங்­களின் இறக்­கு­ம­திக்கு தடை விதித்­தது. பூச்சி தாக்­குதல் தொடர்­பான இந்த நட­வ­டிக்­கையில், மாதுளை, திராட்சை, லிச்சி போன்ற பழங்­களின் ஏற்­று­ம­தியும் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், நவீன வேளாண் முறை­களில் உற்­பத்தி செய்­யப்­பட்ட, பாது­காப்­பான மாம்­ப­ழங்­களின் இறக்­கு­ம­திக்கு, சில ஆண்­டு­க­ளுக்கு முன், அமெ­ரிக்கா அனு­மதி அளித்­தது. இதை­ய­டுத்து, மாதுளை, திராட்சை, லிச்சி ஆகி­ய­வற்­றுக்­கான தடையை நீக்­கவும், மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­தது.

அதன் விளை­வாக, அமெ­ரிக்க உணவு தரக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் குழு, மஹா­ராஷ்­டிர மாநிலம், வாஷிக்கு வந்­தது; அங்­குள்ள, கதி­ரி­யக்க ஆய்­வ­கத்தில், மாதுளம் பழங்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், உட­லுக்கு ஊறு விளை­விக்கும் அம்­சங்கள் இல்லை என்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து, அவற்றின் ஏற்­று­ம­திக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.அதன்­படி, கே.பி.எக்ஸ்போர்ட்ஸ் நிறு­வ­னத்தின், 1.30 டன் ‘பக்வா’ மாதுளம் பழங்கள், முதன் முத­லாக, அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன.

உல­க­ளவில், இந்­தியா, ஆண்­டுக்கு, 20 லட்சம் டன் மாது­ளை­களை உற்­பத்தி செய்து, முத­லி­டத்தில் உள்­ளது. இருந்­த­போ­திலும், 20 ஆயிரம் டன் அள­விற்கே, ஐரோப்பா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு மாதுளை ஏற்­று­ம­தி­யா­கி­றது. இது, அமெ­ரிக்க ஏற்­று­ம­தியால், இந்­தாண்டு, 50 ஆயிரம் டன் ஆக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.