மென்பொருள்

தமிழ்நாட்டின் சாப்ட்வேர் ஏற்றுமதி 10% உயர்ந்திருக்கும்

தமிழ்நாட்டின் சாப்ட்வேர் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்களின் இயக்குனர் ஜே.பார்த்தசாரதி தெரிவித்தார்.

தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிலகம் நடத்திய ‘பிரிட்ஜ் 2014’ எனும் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி, கடந்த நிதி ஆண்டில் ரூ.58,000 கோடி முதல் 60,000 கோடி வரை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். உலக பொருளாதார மந்தநிலையால் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ‘‘நிச்சயமாக இல்லை’’ என்று பதில் அளித்தார்.

கடந்த 2010–11–ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.42 ஆயிரம் கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2011–12–ஆம் ஆண்டில் ஏற்றுமதி 17 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.48 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில் சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதி ரூ.60 ஆயிரம் கோடியை எட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply