ஏற்றுமதி செய்திகள்

தரை விரிப்பு ஏற்றுமதி ரூ.530 கோடியாக வளர்ச்சி

கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி, 530 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (463 கோடி ரூபாய்) விட, 14.3 சதவீதம் அதிகமாகும் என, இந்திய தரைவிரிப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இந்திய தரைவிரிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளதைஅடுத்து, இதன் ஏற்றுமதி உயர்ந்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில் நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட, 13.25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,193 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில் நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி, 5,900 கோடி ரூபாயாக இருந்தது என, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply