இறக்குமதி செய்திகள்

தாவர எண்ணெய் இறக்­கு­மதி சரிவு

புது­டில்லி:சென்ற ஜன­வ­ரியில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்­கு­மதி, 22 சத­வீதம் சரி­வ­டைந்து, 9.05 லட்சம் டன்­னாக குறைந்­துள்­ளது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 11.57 லட்சம் டன்­னாக இருந்­தது. கச்சா பாமாயில் இறக்­கு­மதி, 50 சத­வீதம் குறைந்து, 7.21 லட்சம் டன்னில் இருந்து, 3.37 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, தாவர எண்ணெய் (சமையல் மற்றும் அது சாராத எண்ணெய்), இறக்­கு­மதி குறைந்­துள்­ளது.அதே சமயம், இதே காலத்தில் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் இறக்­கு­மதி, 1.53 லட்சம் டன்னில் இருந்து, 2.08 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.
இதற்கு, கச்சா பாமா­யிலை விட, சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் விலை டன்­னுக்கு, 15 20 டாலர் குறை­வாக இருந்­ததே காரணம் என, இந்­திய எண்ணெய் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.கடந்த, 2013ம் ஆண்டு நவம்பர் முதல், நடப்­பாண்டு ஜன­வரி வரை­யி­லான காலத்தில், தாவர எண்ணெய் இறக்­கு­மதி, 5 சத­வீதம் அதி­க­ரித்து, 27.66 லட்சம் டன்னில் இருந்து, 29.17 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.மொத்த இறக்­கு­ம­தியில், சமையல் எண்­ணெயின் பங்­க­ளிப்பு, 28.51 லட்சம் டன்­னா­கவும், அது சாராத எண்­ணெய்யின் பங்­க­ளிப்பு, 66,644 டன்­னா­கவும் உள்­ளன. சென்ற இரு மாதங்­க­ளாக, சோயா எண்­ணெய்யை விட, சூரி­ய­காந்தி எண்ணெய் விலை குறை­வாக இருந்­ததால், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளது.கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் இறக்­கு­மதி அதி­க­ரித்­ததால், உள்­நாட்டில், சமையல் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்கள், அவற்றின் உற்­பத்தித் திறனை, 55 சத­வீ­தத்தில் இருந்து, 35 சத­வீ­த­மாக குறைத்துக் கொண்­டன.
இறக்­கு­ம­தி­யான கச்சா மற்றும் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் இடை­யி­லான விலை வித்­தி­யாசம் மிக குறை­வாக இருந்­ததால், பல சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டன.இதை­ய­டுத்து, மத்­திய அரசு, அண்­மையில், கச்சா பாமாயில் மற்றும் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் ஆகி­ய­வற்றின் இறக்­கு­மதி வரியை, முறையே, 2.5 சத­வீதம் மற்றும் 10 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது.இந்­தியா, அதன் சமையல் எண்ணெய் தேவையில், 50 சத­வீ­தத்தை, இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்து கொள்­கி­றது. மலே­ஷியா, இந்­தோ­னே­ஷி­யாவில் இருந்து பாமா­யிலும், பிரேசில், அர்­ஜெண்­டி­னாவில் இருந்து, சோயா எண்­ணெய்யும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

Leave a Reply