இறக்குமதி செய்திகள்

தாவர எண்ணெய் இறக்குமதி 1.23 கோடி டன்னாக உயரும்

நடப்பு எண்ணெய் பருவத்தில் (2014 நவம்பர் – 2015 அக்டோபர்) தாவர எண்ணெய் இறக்குமதி 1.23 கோடி டன்னாக உயரும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

கடந்த பருவத்தில்…நடப்பு பருவத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 1.23 கோடி டன்னாக இருக்கும் பட்சத்தில், அது ஒரு சாதனை அளவாக இருக்கும் என கோத்ரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் டோரப் மிஸ்திரி தெரிவித்தார்.

கடந்த எண்ணெய் பருவத்தில் (2013 நவம்பர் – 2014 அக்டோபர்) நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 1.16 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும் மொத்த தாவர எண்ணெயில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இறக்குமதியாகும் தாவர எண்ணெயில் பாமாயிலின் பங்கு 71 சதவீதமாக உள்ளது.நடப்பு பருவத்தில் பாமாயில் இறக்குமதி 77 லட்சம் டன்னிலிருந்து 87.50 லட்சம் டன்னாக உயரும் என்றும், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி முறையே 18 லட்சம் டன் மற்றும் 13 லட்சம் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1.80 கோடி டன் சமையல் எண்ணெய் நுகரப்படுகிறது. இதில் இறக்குமதியாகும் கச்சா மற்றும் சுத்திகரித்த பாமாயிலின் பங்கு மிக அதிகமாக உள்ளது. சோப்பிலிருந்து பிஸ்கெட்டுகள் வரை பல்வேறு பொருள்களை தயாரிக்க பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தோனேஷியா

நம் நாடு இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவு பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. மிகக் குறைந்த அளவு சோயா எண்ணெய் லத்தீன் அமெரிக்காவில் இருந்து வாங்கப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகிறது.

Leave a Reply